TNPSC Official X Account Announcement 2024
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசுத் துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில் நேற்று TNPSC தேர்வு ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
TNPSC ‘X’ கணக்கு:
தமிழ்நாடு அரசப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு மூலம் நியமித்து வருகிறது.
TNPSC யின் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது செய்தி வெளியீடு ஒன்றை டிஎன்பிஎஸ்சி செயலாளர் வாயிலாக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
For More Job Info Join:
அதன்படி “ TNPSC_Office ”என்ற பெயரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தேர்வாணையம் வெளியிடப்படும் தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கிலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு:
அரசுப் பணி என்பதால், குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும்? காலிப் பணியிடங்கள் எவ்வளவு? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது என ஆண்டு அட்டவணையில் அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கிலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.