TNPSC Group 2 Exam Result Released 2024
டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5,097 உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கான முதன்மை தோ்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் விளக்கம்:
For More Job Info Join:
இந்நிலையில், இது தொடர்பாக கடந்த மாத தொடக்கத்தில் விளக்கம் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ’80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால், இந்த மாதத்தில் 15 கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருவது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டால்தான் அடுத்ததாக அரசுப் பணியில் சேர முடியும் என்கிற சூழலும் நிலவி வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி:
இதனிடையே, 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த 9 மாதங்களா? என்று கேள்வி எழுப்பியபல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்வுகளை நடத்துவதிலும், முடிவுகளை வெளியிடுவதில் டி.என்.பி.எஸ்.சி செயல்தன்மை இன்றி நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர்.
மேலும், தேர்வுகள் நடைபெற்ற 6 மாதங்களில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் வெளியீட்டு தேதி:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. 5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.