TNEGA Chennai Job Recruitment 2024
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை மாதம் ரூ.45,000 முதல் ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசின் அனைத்து மின் ஆளுமை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனியாக ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சி TNEGA டிஎன்இஜிஏ என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கைள நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
For More Job Info Join:
என்ஜினீயர்:
TNEGA டிஎன்இஜிஏ-ல் என்ஜினீயர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எம்சிஏ, எம்எஸ்சி, எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.45 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
டேட்டா அனலிஸ்ட்:
Data Analyst பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாக்ட் யூஐ டெவலப்பர்:
React UI Developer பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.1.25 லட்சம் வழங்கப்பட உள்ளது.
சீனியர் டேட்டா அனலிஸ்ட்:
இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யபப்ட உள்ளார். இந்த பணியிடங்களுக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை எப்படி:
இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 30.01.24 தேதிக்குள் tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இதற்கு விண்ணப்பம் கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண், அனுபவத்தின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 31.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNEGA Job Apply Link:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Notification Link:
Apply Link:
Latest Jobs: