TN School Students Important Announcement 2024
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. மாணவர்களும் பொதுத் தேர்வுக்க்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
ஹால் டிக்கெட்:
தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், பிப்ரவரி மாதக் கடைசியில் வழங்கப்பட உள்ளது.
For More Job Info Join:
இந்நிலையில், பிளஸ் 2 பொது தேர்வுகளுக்கு, மாவட்ட வாரியாக முதன்மை காலி விடைத்தாள் கட்டுகள், தேர்வுத்துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடைத்தாள் கட்டுகளில், பாட வாரியாக விடைத்தாள்களை பிரித்து, அதை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தயாரிப்பு பணி மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உயிரி தாவரவியல், உயிரி விலங்கியலுக்கு, தலா, 14 பக்கங்களிலும், மொழிப் பாடங்கள் மற்றும் பிற பாடங்களுக்கு, தலா, 30 பக்கங்களிலும் முதன்மை விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை தவிர, புவியியலுக்கு ஒரு உலக வரைபடம், வரலாற்றுக்கு ஒரு இந்தியா மற்றும் உலக வரைபடம், புள்ளியியல், வணிக கணிதம் பாடங்களுக்கு, கிராஃப் தாள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
TNPSC Whatsapp Group | Join |
Government Job Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram Channel | Join |
Latest News: