TN School Students Half Yearly Exam Leave Change 2023
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வு என மூன்று தேர்வு ஒரு கல்வி ஆண்டில் நடைபெறும்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் முதல் அரையாண்டு தேர்வுகள் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை:
தமிழகத்தின் மிக்ஜாம் புயலினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தேதிகள் மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது.
For More Job Info Join:
அதன் பிறகு தற்போது தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு அதிக அளவிலான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நான்கு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை.
6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளும் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், போன்ற தேர்வுகளும் இன்னும் நடத்தப்பட வேண்டி உள்ளது.
நான்கு மாவட்டங்களிலும் இயல்பு நிலைகள் இன்னும் திரும்பாத காரணத்தினால் தேர்வு நடத்துவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாணவர்களின் பாட புத்தகங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு பிறகு அரையாண்டு தேர்வுகள்:
டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மற்ற மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்ட மாணவர்களுக்கும் அதே தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, புத்தாண்டுக்கு பிறகு பள்ளிகள் திறந்த பின்னர் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து கல்வித்துறை ஆலோசனை செய்து பின்னர் அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிடும்.
அரையாண்டு விடுமுறை:
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் முன்பே அறிவித்திருந்த அரையாண்டு விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Info: