பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு எப்போது முதல் கிடைக்க உள்ளது! புதிய தகவல் – TN Pongal Parisu Items Issue Announcement 2024

TN Pongal Parisu Items Issue Announcement 2024

தை திருநாளான பொங்கல் திருநாளை தமிழக மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குவது வழக்கம்.

TN Pongal Parisu Items Issue Announcement 2024
TN Pongal Parisu Items Issue Announcement 2024

பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு:

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அரசின் பொங்கல் பரிசை பொதுமக்கள் எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுவந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது.

ரூ.6000 கனமழை நிவாரணம்:

கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் உடைமைகளை இழந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

அதன்படி, டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு ரொக்க பணம்:

சென்ற வருடம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த வருடம் தமிழகத்தில் 2.19 கோடி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்:

தமிழக அரசு பொங்கல் பரிசு மட்டுமன்றி பொங்கல் செய்வதற்கு தேவையான சர்க்கைரை, வெல்லம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு எப்போது முதல் கிடைக்க உள்ளது:

கனமழை நிவாரம் வழங்கப்பட்ட உடன் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை வெளியிட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN Pongal Parisu Items Issue Announcement 2024
TN Pongal Parisu Items Issue Announcement 2024

For More Job Info:

Leave a Comment

error: Content is protected !!