TN Pongal Next Day Holiday Chance 2024
வெகு விமர்சையாக உலகமெங்கும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாட தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறைக்கு முன்பே கல்வி நிலையங்கள், அலுவலகங்களில் பொங்கல் வைத்து கொண்டாடி விட்டனர்.
பொங்கல் முடிந்த அடுத்த நாளான ஜனவரி 18ஆம் தேதி ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி கூடுதல் விடுமுறை எதிர்பார்ப்பு:
பொங்கலை கொண்டாட தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள முன்கூட்டியே திட்டமிடல்கள் தொடங்கி விட்டன. இந்நிலையில் வெளியூர் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் திரும்ப ஜனவரி 17ஆம் தேதி இரவே புறப்பட முடியாது அதனால் பொங்கல் பண்டிகை 17ஆம் தேதி முடியும் நிலையில் கூடுதலாக ஒருநாள் அரசு விடுமுறை விடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
For More Job Info Join:
மக்கள் தவிக்க நேரிடும்:
பொங்கலை கொண்டாட 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மக்கள் படிப்படியாக வெளியூர் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் திரும்பி வரும் போது 18ஆம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படும். அலுவலகங்கள் முழுவீச்சில் இயங்கும். எனவே 17ஆம் தேதி இரவே புறப்பட வேண்டும். இது பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கடும் நெருக்கடியை உண்டாக்கும். பலர் பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் விடிய விடிய தவிக்க நேரிடும்.
ஜனவரி 18 தமிழக அரசு முடிவு எதிர்பார்ப்பு:
ஜனவரி 18ஆம் தேதி ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தால் உதவிகரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி செய்தால் சிலர் 17ஆம் தேதி புறப்படுவர். இதையடுத்து 18ஆம் தேதி சிலர் புறப்படுவர். நெரிசலை தவிர்க்கலாம். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா என பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
மாணவர்களின் பெற்றோர் இரண்டு நாட்கள் விடுப்பு:
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஜனவரி 18 மற்றும் 19 என இரண்டு நாட்கள், விடுப்பு எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இத்தகைய திட்டமிடலுடன் தான் ஊருக்கே புறப்பட தயாராகி வருகின்றனர். இதன்மூலம் ஜனவரி 14 தொடங்கி 22 வரை 9 நாட்கள் தொடர்ந்து பொங்கல் விடுமுறை எடுத்து கொள்கின்றனர்.
பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஜனவரி 12, 13, 14மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பொங்கல் முடிந்து மீண்டும் திரும்பும் வகையில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஜனவரி 18ஆம் தேதி ஒருநாள் பொது விடுமுறை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது சாத்தியமா என பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info: