பொங்கல் பண்டிகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்புகள்! TN Government Happy Announcements 2024

TN Government Happy Announcements 2024

தமிழகத்தில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு மகிழ்ச்சி அறிவிப்பை மக்களுக்கு வெளியிட்டுள்ளது. அதை பற்றி விரிவாக பார்ப்போம். 

TN Government Happy Announcements 2024
TN Government Happy Announcements 2024

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1.86 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டோக்கன் பெறாதவர்களும்இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள வங்கிகள் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு இடையே மாறுபடும். அதன் படி தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

ஜனவரி 13 ஆம் தேதி மாதத்தின் 2வது சனிக்கிழமை, ஜனவரி 14 ஆம் தேதி ஞாயிறு மற்றும் போகி பண்டிகை விடுமுறை, ஜனவரி 15 ஆம் தேதி தைப்பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை, ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள் விடுமுறை ஆகும். தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் வங்கி சேவைகளை இன்றே முடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு கடன் உச்ச வரம்பு:

தமிழக கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக குறைந்த வட்டியில் அனைவருக்கும் வீட்டு கடன், வாகன கடன் வணிக கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கடன்களுக்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நகை கடன்கள் 20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல சம்பள கடன் 7 லட்சத்திலிருந்து 15 லட்சமாகவும், சிறு வணிக கடைகளுக்கான கடன் 50,000 – ல் இருந்து 1 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தனிநபர் பிணைய கடன்களுக்கு ஒரு நபர் ரூ.50,000 வரை பிணையம் அளிக்க வேண்டும்.1 லட்சம் வரையிலான தனிநபர் பிணைய கடனுக்கு 2 நபர்கள் பிணையம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிணையம் அளிக்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராக இருக்க வேண்டும்.

தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிகப் பணியிடங்கள்:

தமிழகத்தில் 293 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் 2025 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7 புதிய மாவட்டங்கள்:

கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி, விருத்தாச்சலம், கோபிசெட்டிப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக தமிழ்நாட்டில் உதயமாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் 38வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவெடுத்தன.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
TN Government Happy Announcements 2024
TN Government Happy Announcements 2024

For More Trend News:

Leave a Comment

error: Content is protected !!