TN Electricity Department 20000 jobs Create 2024
நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று (ஜன.7,2024) தொடங்கி இரண்டு நாள்கள் நடந்த ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ இன்று (திங்கள்கிழமை) நிறைவுற்றது.
தமிழக அரசு மின்துறையில் புதிதாக 20,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மின் துறையில் 20000 வேலை வாய்ப்புகள்:
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தினங்கள் சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் முடிவடைந்தது.
For More Job Info Join:
தமிழகத்தில் அதிக முதலீடுகளை தொழில் நிறுவனங்கள் குவிப்பதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இதற்காக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் எதிரொளியாக தமிழக மின் துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 20,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.