TN Electricity Board 10500 Job Vacancy 2024
சூலை 01, 1957இல் சட்டப்படி தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மானப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிறுவனமாக இயங்கி வந்தது.
தமிழக மின்சார துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
தமிழக மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு மின் வாரியத்தில் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 55,000ஐ தாண்டியுள்ளது. தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் போன்ற பிரிவுகள் உள்ளன. அவற்றில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
For More Job Info Join:
மின் வாரியத்தில் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை, 1.44 லட்சம். இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, 88,774 பேர் பணிபுரிகின்றனர். இதனால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை, 55,295 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 2,001 பேர் ஓய்வு பெற்று உள்ளனர்.அதிக காலி பணியிடங்களால், மின் சாதன பழுதுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன.
மின் வாரிய காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை:
இதனால், காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு, வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல், நிரந்தர ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும். முதல் கட்டமாக, 5,000 ஊழியர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் தர வேண்டும்’ என்றனர்.
மின் வாரியத்தில் 10500 காலிப்பணியிடங்கள்:
உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாகப் பரிசீலித்த அரசு 10, 260 காலிப்பணியிடங்களில் முதல்கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளில் ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டேன்ஜெட்கோ அணுக வேண்டும்.
மனிதவள கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் 10, 500 காலிப்பணியிடங்களை நிரப்பப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th, 12th, ITI, Diploma Mechanical / EEE / ECE / COMPUTER / IT / ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
- இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 8000 – ரூ. 100000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
- இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மின் வாரியத்தில் அறிவிப்பு எப்போது வெளியாகும்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10260த்திற்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், கள உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகள் நிரப்புவதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Latest News