பொங்கல் திருநாள் இன்று அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய செயல்கள்! படித்து பின்பற்றுங்க – Pongal Festival Compulsory Following Thing 2024 

Pongal Festival Compulsory Following Thing 2024 

தமிழர்கள் மரபில் மிகவும் முக்கியத்துடன் விளங்க கூடியது பொங்கல் திருநாள். பாரம்பரிய விழாவாக இன்று வரை மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகிறது. மற்ற மாநிலங்களில் இந்த திருநாள் மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த திருநாள், தமிழர்களின் திருநாளாக போற்றி புகழப்பட்டு வருகிறது.

Pongal Festival Compulsory Following Thing 2024 
Pongal Festival Compulsory Following Thing 2024

உலக ஜீவராசிகளின் ஆதி நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவானை வழிபடக்கூடிய திருநாளாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. குளிர்காலமான மார்கழி மாதம் இறுதியில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு தைத்திருநாள் முதல் நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

 

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    
Telegram Channel  Join 
Whatsapp Channel Join
TNPSC Whatsapp Group Join

வீட்டை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை போகித் திருநாள் அன்று எரித்து குளித்துவிட்டு வீட்டை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்து கோயிலாக மாற்றி பொங்கல் திருநாள் பூஜை செய்யப்படுகிறது. குறிப்பாக பொங்கலில் வெள்ளம் சேர்ப்பது சூரிய பகவானுக்கு செய்யப்படும் நேர்த்திக்கடனாக கூறப்படுகிறது.

கட்டாயம் செய்ய வேண்டிய செயல்கள்:

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அன்றைய தினம் சூரிய பகவானை தான் முதலில் வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் கோயிலுக்கு சென்று சூரிய பகவானை வழிபாடு செய்து அவருக்கு ஐந்து விதமான சிவப்பு மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த திருநாளில் சூரியனின் காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால் வறுமை நீங்கும் என கூறப்படுகிறது. ஒரு செம்பு பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்டு சூரிய பகவானை வழிபாடு செய்து அந்த பாலை சிறிதளவு நீரில் ஊற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் முழுமையாக வெற்றி அடையும் என நம்பப்பட்டு வருகிறது.

சூரிய பகவானை வேண்டிக் கொண்டு சர்க்கரை பொங்கல் செய்பவர்கள், மீதமிருப்பதை கீழே கொட்டி விடுகிறார்கள். அப்படி கொட்டினால் தோஷம் உண்டாகும் பொங்கலை வீணாக்காமல் சாப்பிட்டு விட வேண்டும்.

சூரிய பகவான் பயணம் தைத்திருநாளில் இருக்கின்ற அதே நேரத்தில் இல்லாதவர்களுக்கு உணவளித்து, இல்லையென்றால் தன்னால் இயன்றவற்றை மற்றவர்களுக்கு தானம் செய்தால் பிறவி பாக்கியம் கிடைக்கும், சிக்கல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

பொங்கல் திருநாளை இதுபோன்று சிறப்பாக சரியான முறையில் கொண்டாடி வழிபட்டால், சூரிய பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். தானம் தான் ஒருவரை காலம் கடந்து வாழ வைக்கும் என்பதற்குச் சான்றாக தானம் செய்து உங்களது புண்ணியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join
Pongal Festival Compulsory Following Thing 2024 
Pongal Festival Compulsory Following Thing 2024

For More Job Info:

Leave a Comment

error: Content is protected !!