January 22 Holiday Chief Minister Announcement 2024
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை ஜனவரி 22ஆம் தேதி மிகக் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரை நாள் விடுமுறை:
For More Job Info Join:
இந்நிலையில், நாளை ஜனவரி 22ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி ஊழியர்களின் உணர்விற்கும் மதிப்பளித்து அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் அறிவிப்பு:
புதுச்சேரி மாநிலத்திலும் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை என முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு காட்சிகள் கோரிக்கை சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நீதி கட்சி:
புதிய நீதி கட்சி சார்பாக தமிழக அரசை டாக்டர் ஏசி சண்முகம் நிறுவன தலைவராக இருக்கின்ற புதிய நீதி கட்சியின் தலைவர் அவர்கள் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜனவரி 22ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் அறிக்கை.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நம் அண்டை மாநிலமான புதுச்சேரி உட்படப் பிற மாநிலங்களும் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.
ஆன்மீக பக்தர்கள் நிறைந்து வாழும் நம் தமிழகத்திலும் நம் மக்களின் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சிகளில் காண வசதியாக வருகிற ஜனவரி 22ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என புதிய நீதிக்கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
பொதுநல மனு:
அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொது விடுமுறை தமிழகத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது .இது தொடர்பாக வெளியான செய்தி என்னவென்றால்ஸ்ரீ ராமநவமி சிவராத்திரி ஆகிய நாட்களில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா ஹை கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்திற்கு விடுமுறை:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான நாளை ஜனவரி 22ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா எனவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு இது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் விட வில்லை. இன்று மாலைக்குள் இது பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என திர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Latest Jobs: