January 22 Declared as Common Holiday 2024
அயோத்தியில் ராமர் கோவில் இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது. இந்த கோவில் கட்ட 2019ஆம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன் பின் 2020ஆம் ஆண்டு பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிலையில் இந்த கோவில் 225 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமாகவும், கலை நயமிக்கதாக இருக்கிறது.
ரயில் நிலையங்களை மினொளியில் ஒளிர:
For More Job Info Join:
இந்த கோவிலின் பிரதிஷ்டை விழா வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் சில மாநிலங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவில் திறப்பை ஒட்டி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மினொளியில் ஒளிர விட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் கும்பாபிஷேகம்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.
இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜனவரி 22 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 பொது விடுமுறை:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநிலத்தில் இருந்தும் முக்கிய சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை, தொடர்ந்து ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி ஜனவரி 22 ஆம் தேதி கோவா மற்றும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் சிறப்பு தெய்வமான ராமரின் கோவில் திறக்கப்படுவதால் நாடு முழுவதும் ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படலாம். பொறுத்து இருந்து பார்க்கலாம்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Latest News